search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பழக்கம்"

    ஓசூரில் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த வாணியம்பாடி எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    வாணியம்பாடியை சேர்ந்தவர் குணசேகரன் (43), எலக்ட்ரீசியன். இவர் ஓசூரில் உள்ள அரசம்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள குணசேகரன் கடந்த 25-ந் தேதியன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஓசூர் ஈ.எஸ்.ஐ. ரெயில்ரோடு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார் அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் புது மாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில் பாளையம் சோழ நகரை சேர்ந்தவர் குமார்ராஜா (வயது 33).

    இவர் பெருந்துறை சிப் காட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணி புரிந்த ஷோபனா (21). இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 மாதத்துக்கு முன் இவர்களின் திருமணம் நடந்தது.

    குமார்ராஜாவுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை காதல் மனைவி ஷோபனா கண்டித்தார். இது தொடர்பாக இரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதில் ஷோபனா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டார். இதனால் குமார் ராஜா மிக வேதனையில் இருந்தார் இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அவரது அம்மா வெளியே போய் விட்டார். இதனால் அவர் காதல் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வீட்டில் உள்ள மின் விசிறி கம்பியில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த அவரது தாயார் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவையில், வார இறுதி நாட்களில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து உள்ளது.
    கோவை:

    கோவை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் அதிகாலை 1 மணிக்கு வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திங்கள் முதல் வியாழன் வரை சாதாரண நாட்களில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டும் 50 முதல் 60 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து 150 முதல் 160 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மதுகுடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை 6 ஆயிரத்து 218 வழக்குகளும், அதே கால கட்டத்தில் நடப்பு ஆண்டில் 14 ஆயிரத்து 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை கோர்ட்டுக்கு சென்று செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வாகன ஓட்டிகளை வலியுறுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதின் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத் தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை 196 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டில் அதே கால கட்டத்தில் 111 பேர் இறந்துள்ளனர்.

    போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 96 ஆயிரத்து 761 வழக்குகளும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 180 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    நெல்லித்தோப்பில் காண்டிராக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அருள்படையாச்சி வீதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது48). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலையை காண்டிராக்டு அடிப்படையில் செய்து தரும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சோபியா என்ற மனைவியும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

    இதற்கிடையே சமீபகாலமாக ஜெயராஜிக்கு கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை அமையவில்லை. மேலும் மதுகுடிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி கொண்ட ஜெயராஜ் மதுகுடிக்கவும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்க முடியாமலும் திண்டாடி வந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.

    நேற்று காலை சோபியா கணவருக்கும், மகளுக்கும் உணவு தயாரித்து வைத்துவிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை பார்க்க சென்றிருந்தார். இந்த நிலையில் மதியம் ஜெயராஜ் மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு மதுபாட்டிலுடன் வந்தார்.

    வீட்டின் கீழ்தளத்தில் மகள் திவ்யா விளையாடி கொண்டு இருந்த வேளையில் ஜெயராஜ் கையில் கொண்டு வந்த மீதி மதுவை குடித்து விட்டு வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து திவ்யா வீட்டுக்குள் வந்து பார்த்த போது தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாய் சோபியாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சோபியா இதுபற்றி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து ஜெயராஜ் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா?அல்லது வேறுஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (40)டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா (35).  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரவணன் மதுகுடித்து விட்டு மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி மஞ்சுளா கண்டித்ததாக தெரிகிறது. அதேபோல் சம்பவதன்று மது குடித்து விட்டு சரவணன்,  மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால்  மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதனால் மனவேதனை அடைந்த  சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போதுதூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம்  போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ  மனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

    இதேபோல் தவுட்டுப்பாளையம் அருகே கட்டி பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது  மனைவி சித்ரா  (28), இவர் அப்பகுதியில்  உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர் சித்ராவை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கியுள்ளார். இது குறித்து சித்ரா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் அந்தராசிக் குப்பம் தேவகி நகரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சதாசிவத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவ்வப்போது அவரது மனைவி நாகலட்சுமி கண்டிப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவும் சதாசிவம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது நாகலட்சுமி கண்டித்தார். இதனால் சதாசிவம் மனமுடைந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று அதிகாலை நாகலட்சுமி முதல் ஷிப்டு வேலைக்கு சென்று விட்டார். மகன்களும் வெளியே விளையாட சென்ற நிலையில் சதாசிவம் வீட்டில் மின்வயரில் தூக்குபோட்டு தொங்கினார்.

    காலை உணவு சாப்பிட நாகலட்சுமி வீட்டுக்கு வந்த போது கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதாசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டுரோட்டில் மது குடிக்க பணம் தராததால் பேரனே பாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டு ரோட்டில் வசித்து வந்தவர் மணிமேகலை (வயது 70). இவருடன் மகளின் மகனான கமல் தங்கி இருந்து பொன்னேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டுக்கு வந்த கமல் மது குடிக்க பணம் கேட்டு மணிமேகலையுடன் தகராறு செய்தார். இதனை மணிமேகலை கண்டித்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் மது குடித்து வந்த கமல் மீண்டும் பாட்டி மணிமேகலையிடம் தகராறு செய்தார். அப்போது அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் மணிமேகலையை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மணிமேகலை கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கமலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    ×